search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவன் கொலை"

    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாரப்பன் தெருவை சேர்ந்தவர் அன்சாரிகான். இவரது மகன் அப்துல்லா என்கின்ற அப்துல் கலாம் (வயது 14). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அப்துல்லா அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் காக்களூரில் உள்ள பள்ளி வளாக மைதானத்தில் நேற்று கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பந்து அங்கிருந்த ஒரு மாணவன் மீது விழுந்தது.

    இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அப்துல்லாவை தாக்கினார். இதில் அப்துல்லா மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்ட அப்துல்லாவின் நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அப்துல்லா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சோளிங்கரில் பள்ளி மாணவன் கொலையில் சிறுவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோளிங்கர்:

    சோளிங்கரில் போலீஸ் குடியிருப்பு பின் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் கார்த்தி (வயது 14). இவர், ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் மாலை கார்த்தி மாயமானார்.

    நேற்று காலை சோளிங்கர் சந்தை பின்புறத்தில் உள்ள ஏரியில் மாணவன் கார்த்தி உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    சோளிங்கர் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மாணவன் கார்த்தி கொலை வழக்கு விசாரணையை சோளிங்கர் போலீசார் திடீரென திசை திருப்பியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.

    நண்பர்களுடன் கார்த்தி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது அங்கு கயிற்றுடன் இணைக்கப்பட்ட இரும்பு வாளியின் பிடி கிடந்தது. அதை அவர், தூக்கிப்போட்டு விளையாடினார். உயர் அழுத்த மின்கம்பியில் வாளிபட்டது.

    இதில் மின்சாரம் பாய்ந்து கார்த்தி உயிரிழந்திருக்கலாம் என்று கூறினர். இதையறிந்த மின்வாரிய அதிகாரி ஒருவர் மாணவன் கார்த்தி உடலை பார்வையிட்டு போலீஸ் நிலையம் வந்தார். மின்சாரம் தாக்கி மாணவன் கார்த்தி இறக்கவில்லை.

    மாணவனின் உடலில் உள்ள காயங்கள் மின்சாரம் தாக்கியதில்லை. வழக்கை திசை திருப்ப வேண்டாம் என போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து, மாணவன் கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேரை பிடித்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுவர்கள் தான் மாணவன் கார்த்தியுடன் கடைசியாக இருந்தனர்.

    எனவே, கார்த்தி கொலை தொடர்பாக சிறுவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×